Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 112:33:08
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கிறது ஆஸ்திரேலியா!

    11/08/2025 Duración: 03min

    ஆஸ்திரேலியா பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் என பிரதமர் Anthony Albanese அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலியாவில் விவாகரத்து குறைகிறது. ஏன்?

    11/08/2025 Duración: 09min

    நம் நாட்டில் திருமணம் செய்து கொண்ட இருவரில் யார் மீதும் தவறு இல்லை என்றாலும், இருவரும் விரும்பினால் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்ற சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்து, தற்போது விவாகரத்துகள் மிகக் குறைந்த விகிதத்திற்குக் குறைந்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ரிசர்வ் வங்கி நாட்டின் வட்டி வீதத்தை நாளை குறைக்குமா?

    11/08/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 11/08/2025) செய்திகள். வாசித்தவர் : றேனுகா துரைசிங்கம்.

  • மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு சொத்து தருவதை ஏன் நிபுணர்கள் விமர்சிக்கின்றனர்?

    11/08/2025 Duración: 13min

    ஆஸ்திரேலியாவில் மூத்த தலைமுறையிடம் செல்வம் குவிந்துகொண்டே செல்கிறது; இளைய தலைமுறை வீடு வாங்கவே தள்ளாடுகிறது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து கலந்துரையாடுகிறார் ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் மக்கள் கொள்கை குறித்து முதுகலைப் பட்டம் பெற்ற பவித்ரா வரதலிங்கம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    10/08/2025 Duración: 10min

    இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி எதிரொலி - எதிர்கொள்ள தயாராகிறதா இந்தியா?; தமிழகத்தில் பரப்பை ஏற்படுத்திய "சொசைட்டி பரிதாபங்கள்" என்னும் காணொளி - 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் மீது புகார்; பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் மகளிர் மாநாடு; தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - ஆதரவும் எதிர்ப்பும்; இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்திகளின் பின்னணி” நிகழ்ச்சிக்காக இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • இந்த வாரத்தின் ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் தொகுப்பு

    09/08/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (3 – 9 ஆகஸ்ட் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 9 ஆகஸ்ட் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • 'பத்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் இப்போது மில்லியனர்'

    08/08/2025 Duración: 02min

    அமெரிக்க டாலர் அடிப்படையில் பார்க்கும்போது 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் மில்லியனர்களாக மாறிவிட்டதாக சுவிஸ் வங்கியான UBS தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ஆஸ்திரேலிய பெண்களில் அதிகமானோருக்கு தலைவலி - ஆய்வு

    08/08/2025 Duración: 02min

    ஆஸ்திரேலிய பெண்களுக்கு Migraine என்ற தலைவலி எதிர்பார்த்ததைவிட அதிகமாக ஏற்படுவதாக ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • ‘உலகில் சிக்கலில் மாட்டும் தமிழர்களுக்கு உதவுவதே எங்கள் முதல் பணி’

    08/08/2025 Duración: 14min

    உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை” யின் தலைவர் கார்த்திகேய சிவசேனபதி அவர்கள் சிட்னி நகர் வந்திருந்த வேளை, அவரை SBS கலையகத்தில் றைசெல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நேர்காணலின் இரண்டாம் பாகம்.

  • ‘காங்கேயம் மாடுகள் வழி அரசியலுக்கு வந்தேன்’

    08/08/2025 Duración: 16min

    உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை தமிழகத்துடன் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் “அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை” யின் தலைவர் கார்த்திகேய சிவசேனபதி அவர்கள் சிட்னி நகர் வந்திருந்த வேளை, அவரை SBS கலையகத்தில் றைசெல் மற்றும் குலசேகரம் சஞ்சயன் நடத்திய நேர்காணலின் முதல் பாகம்.

  • Negative Gearingஇல் மாற்றம் கொண்டுவர அரசு இணங்குமா?

    08/08/2025 Duración: 06min

    உற்பத்தித்திறன் பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக, வரி முறைகளில் மாற்றத்திற்காக தொழிற்சங்கங்கள் எடுக்கும் முயற்சியில், நலன்புரி குழுக்களும் இணைகின்றன. அதில் ஒரு பகுதியாக, அடுத்த ஐந்து ஆண்டுகளில் Negative Gearing படிப்படியாகக் குறைக்கப்படுவதை Australian Council of Social Services (ஆஸ்திரேலிய சமூக சேவைகள் கவுன்சில், ACOSS) விரும்புகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • ரஷ்ய-யுக்ரேன் போரை அமெரிக்க அதிபர் நிறுத்துவாரா?

    08/08/2025 Duración: 03min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 08/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    07/08/2025 Duración: 08min

    இலங்கை காவல்த்துறை மா அதிபர் நாடாளுமன்றத்தினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்; யாழ்.செம்மணியில் தொடரும் அகழ்வுப் பணியில் மனித எச்சங்கள் தினசரியாக மீட்கப்பட்டு வருகின்றன. இவை உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு

    07/08/2025 Duración: 09min

    தொடரும் காசா பட்டினிச் சாவுகள்; காசாவை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்; இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதித்த அமெரிக்கா; தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம்; ஆயுதங்களை கைவிடும் குர்து கிளிர்ச்சியாளர்கள்: மேற்பார்வையிட நாடாளுமன்ற குழுவை அமைத்துள்ள துருக்கி; சிரியாவில் குர்து படையினர் மீது தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.; வெளிநாட்டு கூலிப்படையினர் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் உள்நாட்டுப் போரை தூண்டுகிறது- சூடான்; கானா ஹெலிகாப்டர் விபத்து உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.

  • NSW மாநிலத்தில் 14 வயது வெளிநாட்டு மாணவி குத்திக்கொலை!

    07/08/2025 Duración: 02min

    NSW மாநிலத்தில் 14 வயது வெளிநாட்டு மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • மறைந்த மூத்த கல்வியாளர் பேராசிரியர் வசந்தி தேவி அவர்களின் நேர்முகம்

    07/08/2025 Duración: 16min

    தமிழகத்தின் மூத்த கல்வியாளரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வசந்திதேவி அவர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (1 ஆகஸ்ட் 2025) காலமானார். 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் நமக்கு வழங்கிய நேர்முகத்தின் மறுபதிவு. அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • ஆஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்தில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் வளர்ப்பில் வேறுபாடு உள்ளதா?

    07/08/2025 Duración: 14min

    ஆஸ்திரேலியாவில் தமிழ் சமூகத்தில் ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் வளர்ப்பில் வேறுபாடு உள்ளதா? இளைஞர்கள் நடத்தும் விவாதம்.பங்குபெறுபவர்கள் : கவிஜா விக்னேஸ்வரன், ஜனார்தன் குமரகுருபரன், ரமணன் ஜெகதீஸ்வரன் மற்றும் ஜனனி ஜெகன்மோகன். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி. 2016ஆம் ஆண்டு செல்வி தயாரித்த நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பு இது.

  • ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் Garma திருவிழா

    07/08/2025 Duración: 09min

    25வது Garma (ஃகார்மா) திருவிழா, நாடு முழுவதிலுமிருந்து மட்டுமல்ல, அதற்கு அப்பாலும் இருந்து, விருந்தினர்களை Gumatj (குமாட்ஜ்) நாட்டில் ஒன்று திரட்டியது. ஆஸ்திரேலியாவின் வட பிராந்தியத்தின் வட கிழக்குப் பகுதியில் உள்ள தொலை தூரப் பகுதியான Arnhem Land - ஆர்ன்ஹம் தேசத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் நாள் – கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நான்கு நாள் கொண்டாட்டத்தில், ஆஸ்திரேலியாவின் பன்முகத்தன்மை கொண்ட மற்றும் பன்முக கலாச்சார சமூகங்களைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள், கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் என்று ஏராளமானோர் பூர்வீகக் குடிமக்கள் விழாவில் கலந்து கொண்டனர். Garma திருவிழாவில் நேரடியாகக் கலந்து கொண்ட, SBS Arabic தயாரிப்பாளர் Ramy Aly மற்றும் SBS Chinese தயாரிப்பாளர் Rena Li ஆகியோரின் உள்ளீடுகளுடன் Lera Shvets தயாரித்த விவரணத்தின் கூறுகளுடன், இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் அதிபர் திட்டம்

    07/08/2025 Duración: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 07/08/2025) செய்திகள். வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.

  • குயின்ஸ்லாந்தில் முன்னாள் காதலியை தாக்கிய வழக்கில் இலங்கை மாணவருக்கு தண்டனை!

    06/08/2025 Duración: 02min

    தனது முன்னாள் காதலியை தாக்கிய இலங்கை மாணவரை குயின்ஸ்லாந்து James Cook பல்கலைக்கழகம் இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.

página 4 de 45