Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்
31/07/2025 Duración: 07minதேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழர் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எந்த முயற்சிகளையும் முன்னெடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவிப்பு; கையகப்படுத்தப்பட்ட தமது விவசாய நிலங்களை மீள ஒப்படைக்குமாறு திருகோணமலை முத்துநகர் மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
பாலஸ்தீனத்தை உடனடியாக அங்கீகரிக்க ஏன் ஆஸ்திரேலியா மறுக்கிறது?
31/07/2025 Duración: 10minகாசா பகுதியில் இஸ்ரேல் சர்வதேச சட்ட மீறல்களை செய்வதாக பல தரப்புகளும் குற்றச்சாட்டும் பின்னணியில் தாமும் இஸ்ரேலை கண்டிகிறோம் என்று கூறும் ஆஸ்திரேலிய அரசு பாலஸ்தீனத்தை உடனடியாக ஒரு நாடாக அங்கீகரிக்கத் திட்டமில்லை என கூறியுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், கனடா எனும் மேற்கத்திய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகாரக்கப்போவதாக அறிவித்திருக்கும் பின்னணியில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க ஆஸ்திரேலியா தாமதிக்கும் காரணங்களை விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் வெங்கடேசன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் – றைசெல்.
-
HECS கடன் 20% குறைப்பு: மாணவர்கள் மகிழ்ச்சி. மாற்றங்கள் எப்போது?
31/07/2025 Duración: 07minலேபர் அரசானது, HECS கடன்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது நேரடியாக மூன்று மில்லியன் ஆஸ்திரேலிய மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒரு தீர்மானமாகும். இதுபற்றிய செய்தியின் பின்னணியினைத் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.
-
இந்த வார உலக செய்திகளின் தொகுப்பு
31/07/2025 Duración: 07minகாசாவில் அதிகரிக்கும் பட்டினி உயிரிழப்புகள்; பாலஸ்தீன விவகாரம்- இருநாடுகள் என்ற தீர்வு?; பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க கனடா திட்டம்: அமெரிக்காவின் எதிர்வினை; பசிபிக் நாடுகள், தென் அமெரிக்கா நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; காங்கோ குடியரசில் ஐஎஸ் தாக்குதல்: 43 பேர் உயிரிழப்பு; அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தம்; மேற்கு, மத்திய ஆப்பிரிக்காவில் காலரா அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள 80,000 குழந்தைகள் உள்ளிட்ட உலகச்செய்திகளின் பின்னணியை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் தமிழ்ப் பிரபாகரன்.
-
வரலாற்று ஆளுமை: ஆஸ்திரேலிய மம்பட்டியான் ‘நெட் கெல்லி’
31/07/2025 Duración: 09minஆஸ்திரேலியாவின் தவிர்க்கமுடியாத வரலாற்று அடையாளங்களுள் முக்கியமான பெயர் நெட் கெல்லி (Ned Kelly). போற்றவும் தூற்றவுமான இருவேறு மனோவியல்புகளை மக்களின் மத்தியில் விதைத்த ஒரு விநோத ஆளுமை. ஆஸ்திரேலியாவில் அன்றைய காலனியாதிக்கத்தின் அதிகாரத்திற்கு எதிராக, காவல்துறைக்குப் பெரும் சவாலாயிருந்து, காடுகளில் மறைந்துவாழ்ந்து, தந்திரமாய் சுற்றிவளைக்கப்பட்டு, இறுதியில் தூக்கிலடப்பட்டவர். அவர் பற்றிய தகவல்களை “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி முன்வைக்கிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.
-
நிரந்தர விசா வழங்குமாறு அகதிகள் குழு ஆஸ்திரேலிய நாடாளுமன்றில் முறையீடு
31/07/2025 Duración: 11minFast Track நடைமுறையினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து அகதிகளுக்கும் நிரந்தர விசா வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி நான்கு அகதிகளைக் கொண்ட குழுவொன்று கன்பரா நாடாளுமன்றத்திற்குச் சென்று முறையீடு செய்துள்ளது. இதுதொடர்பில் இக்குழுவில் அங்கம் வகித்தவரான ரதி பாத்லட் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஏழு லட்சம் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் 60 மில்லியன் டாலரை திருப்பித் தருகின்றன!
31/07/2025 Duración: 07minஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள், குறைந்த வருமானம் பெறும் வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணங்களை வசூலித்ததற்காக, $60 மில்லியன் டாலருக்கும் மேற்பட்ட தொகையை திருப்பி கொடுக்கவிருக்கின்றன. இது குறித்த செய்தியின் பின்னணியை முன்வைக்கிறார் றைசெல்.
-
செவ்வாய்க்கு மனிதனை அனுப்பினாலும் வளர்த்தவர்களை மறக்க முடியுமா?
31/07/2025 Duración: 13minஅமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவில், உயிர் மருத்துவவியல் ஆராய்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (Biomedical Research and Environmental Sciences) பிரிவின் துணைத் தலைவராகப் பணியாற்றும் டாக்டர் அந்தோனி ஜீவராஜன் அவர்கள் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் திட்டத்திலும் தனது பணியை செய்து வருகிறார். தனது பணி குறித்தும் நாசா குறித்தும் குலசேகரம் சஞ்சயனுடன் 2016ஆம் ஆண்டில் Dr. Antony Jeevarajan உரையாடியிருந்தார். அந்த நேர்காணலின் மறு ஒலிபரப்பு இது.
-
ஆஸ்திரேலியாவில் தயாரான ராக்கெட் முதன்முறையாக விண்ணில் ஏவப்பட்டது!
31/07/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 31/07/2025) செய்திகள். வாசித்தவர்: றைசெல்.
-
நேயர்களின் கேள்விகளும் அதற்கான பதில்களும்
31/07/2025 Duración: 12minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 1.
-
ஆஸ்திரேலிய காவல்துறை இன்னமும் குதிரைகளைப் பயன்படுத்துவது ஏன்?
31/07/2025 Duración: 11minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 2.
-
ஆஸ்திரேலியா அறிவோம்: The Pinnacles
31/07/2025 Duración: 08minமேற்கு ஆஸ்திரேலியாவில், பெர்த்திலிருந்து 2 மணி நரே பயணத்தில், நம்பூங் தேசிய பூங்காவில், செர்வாண்டஸ் அருகே அமைந்துள்ள சுண்ணாம்புக் கல் தூண்களின் பழமை, அறிவியல் உண்மைகள், அங்கு சென்றால் என்னென்ன அம்சங்களைப் பார்க்கலாம், என்னென்ன முன் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்ற தகவல்களைத் தருகிறார் உயிர்மெய்யார்.
-
NSW ரயில் பயணிகளுக்கான இலவச பயணச்சலுகை நீட்டிப்பு
30/07/2025 Duración: 02minநியூ சவுத் வேல்ஸ் மாநில ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட 2-நாள் இலவச பயணச்சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
For many Muslim women in Australia, Islamophobia feels inevitable - ஆஸ்திரேலியாவில் பல முஸ்லீம் பெண்கள் இஸ்லாமோஃபோபியா தவிர்க்கமுடியாததுபோல் உணர்கிறார்கள்!
30/07/2025 Duración: 07min“We're talking about thousands and thousands of incidents ... for many Muslim females who wear the headscarf, they feel that an incident of Islamophobia is what it means to be a Muslim here in Australia." - இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு காரணமாக நடைபெறும் தாக்குதல் நிகழ்வுகள் ஆஸ்திரேலியாவில் முஸ்லீமாக வாழ்வதின் ஓர் அங்கமாகவே உள்ளதாக இங்குள்ள பல முஸ்லீம் பெண்கள் கூறுகிறார்கள்.
-
தாய்லாந்து – கம்போடியா சண்டையும், போர்நிறுத்தமும்: பின்னணி என்ன?
30/07/2025 Duración: 11minதாய்லாந்து – கம்போடியா நாடுகளின் நீண்ட எல்லையில் இரு நாடுகளுக்குமிடையே நடந்த சண்டையைத் தொடர்ந்து தற்போது போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை குறித்தும், போர் நிறுத்த பின்னணி குறித்தும் விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
உங்கள் காரை திருட்டிலிருந்து பாதுகாப்பது எப்படி?
30/07/2025 Duración: 18minநாட்டின் சட்டம், ஒழுங்கு பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விடயங்கள் தொடர்பில் விக்டோரிய காவல்துறையுடன் இணைந்து நாம் வழங்கும் நிகழ்ச்சித் தொடரில் இன்றையதினம், நேயர்களிடமிருந்து வந்த சில கேள்விகளுக்கு காவல்துறை அதிகாரிகள் டினேஷ் நெட்டுர் மற்றும் ராஜேஷ் சாம்பமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கின்றனர். அவர்களோடு உரையாடுபவர் றேனுகா துரைசிங்கம். பாகம் 3.
-
மலையக மக்கள்: இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?
30/07/2025 Duración: 06minஇலங்கையில் மாற்றங்களை எதிர்பார்த்து தேசிய மக்கள் சக்தி அரசுக்கு மலையக மக்கள் வாக்களித்தார்கள் என்றும் ஆனால் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் எதிரணியினர் தெவித்துள்ளனர். இதற்கு அரசு தரப்பின் பதில்கள் என்ன என்பது தொடர்பில் “பார்வைகள்” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
சர்வதேச மாணவர்களுக்கான வாய்ப்புக்களை விரிவுபடுத்தும் நியூசிலாந்து!
30/07/2025 Duración: 03minநியூசிலாந்து அரசு, தனது சர்வதேச கல்வி சந்தையின் அளவை இரட்டிப்பாக்கும் நோக்கில் புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
“நண்பனின்றி நாளென்ன? நட்பின்றி பொழுதென்ன?”
29/07/2025 Duración: 15minஐக்கிய நாடுகள் சபை, 2011 ஆம் ஆண்டில், ஜூலை 30ஆம் நாளை அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதில் நட்பின் முக்கியத்துவத்தை மதிக்கும் நாளாக அறிவித்தது. ஒவ்வொரு ஆண்டும், ஆஸ்திரேலியா மற்றும் உலகம் முழுவதும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் கொண்டாட்டங்கள் நடக்கின்றன. தனிநபர்கள், கலாச்சாரங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையிலான நட்பு உத்வேகம் மற்றும் நல்லிணக்கத்தின் சக்திவாய்ந்த ஆதாரமாக செயல்பட முடியும் என்பதை ஐ.நா அங்கீகரிக்கிறது. தனிப்பட்ட பிணைப்புகள் மற்றும் சமூக உறவுகள் முதல் சர்வதேச உறவுகள் வரை, சர்வதேச நட்பு தினத்தில் நட்பின் உணர்வைக் கொண்டாடும் ஒரு தொகுப்பை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
T20 தொடரில், ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகளை 5:0 என வெற்றி
29/07/2025 Duración: 03minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 30/07/2025) செய்திகள். வாசித்தவர் : மகேஸ்வரன் பிரபாகரன்.