Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
"சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவோம்" - One Nation கட்சி
25/03/2025 Duración: 09minPauline Hanson-இன் One Nation கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் சுமார் 75,000 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு குடியேற்றம் நாட்டில் நிலவும் வீடுகள் பற்றாக்குறைக்கு காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது குறித்து SBS Examines -இற்காக Rachael Knowles, Jarrod Landells மற்றும் Cristina Freitas இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய விவரணத்தை தமிழில் தயாரித்து தருகிறார் செல்வி.
-
இன்றிரவு நிதிநிலை அறிக்கை; முன்னோட்டமாக சில தகவல்கள் வெளிவந்தன!
24/03/2025 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 25/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.
-
பெர்த் விமான நிலைய ஊழியரைத் தாக்கிய இந்திய நபருக்கான தண்டனை அறிவிப்பு!
24/03/2025 Duración: 02minபெர்த் விமான நிலைய ஊழியர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில், இந்தியர் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட விமானநிலைய ஊழியருக்கு 7500 டொலர்கள் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
எங்கும் எதிலும் செயற்கை நுண்ணறிவு: AIஐ புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது எப்படி?
24/03/2025 Duración: 16minநாம் பயன்படுத்தும் பொருட்களில் நமக்கு தெரியாமலேயே ஒளிந்திருக்கிறது செயற்கை நுண்ணறிவு என்கிறார் AI நிபுணர் சுகன்யா அவர்கள். உலகில் நீக்கமற நிறைந்திருக்கும் AIஐ எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துவது, அதில் நாம் எப்படி எச்சரிக்கையாக இருப்பது என்று விளக்குகிறார் பிரிஸ்பேன் 4EB தமிழ் ஒலி வானொலியின் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சுகன்யா அவர்கள். அவரோடு உரையாடுகிறார் றைசெல். இதில் தரப்படும் ஆலோசனைகள் அல்லது தகவல்கள் பொதுவானவை. இதை தொழில்முறை ஆலோசனையாக கருதாதீர்கள். கேட்கும் நேயர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பிரச்சனை அல்லது பின்னணியைப் பொறுத்து தேவையான நிபுணர்களின் ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-
இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு
24/03/2025 Duración: 09minநாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு தொடர்பாக சென்னையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டம், தமிழக வெற்றி கழகத்துக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் நேரடி மோதல்கள் மற்றும் தமிழக அரசியலில் பூகம்பங்களை ஏற்படுத்தும் 'டாஸ்மாக்' ஊழல் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்
-
மருந்து விலையை ஆஸ்திரேலிய அரசு குறைப்பதை அமெரிக்கா ஏன் எதிர்க்கிறது?
24/03/2025 Duración: 09minஆஸ்திரேலிய மருந்துகளுக்கு வரி விதிக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அமெரிக்க மருந்து தயாரிப்பாளர்கள் குழு வலியுறுத்தியுள்ளது. Pharmaceutical Benefits Scheme (PBS) என்ற எமது நாட்டின் மருந்துகளை மலிவாக விற்க மானியங்கள் வழங்கும் திட்டம், அமெரிக்க நிறுவனங்களுக்கு நிதி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்று அவை வாதிடுகின்றனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக PBS திட்டத்தின் கீழ் மருந்து விலைகளைக் குறைப்பதாக இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளும் உறுதியளித்துள்ள நிலையில் இந்த முறையீடு வந்துள்ளது. வரி அதிகரிப்புகளை அமெரிக்க அரசு அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் பதட்டங்களுக்கு மத்தியில் Labor கட்சியும் Coalition எதிர்க் கட்சிகளும் PBS திட்டத்தைப் பாதுகாக்கப் போவதாக உறுதியளித்துள்ளன. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
காசாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டியது: காசா சுகாதார அமைச்சு
24/03/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 24 மார்ச் 2025 திங்கட்கிழமை. வாசித்தவர். றேனுகா துரைசிங்கம்.
-
விண்வெளியில் ஒன்பது மாதங்களாக சிக்கியவர்கள் மீண்டு வந்தது எப்படி?
23/03/2025 Duración: 09minவிண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பமுடியாத நிலையில் கடந்த ஒன்பது மாதகாலமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் (International Space Station) தங்கியிருந்த அமெரிக்காவின் இரு விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வாரம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியிருப்பது குறித்த பின்னணி நிகழ்ச்சி. விளக்குகிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.
-
ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சிவீதம் வீழ்ச்சி- காரணம் என்ன?
22/03/2025 Duración: 02minஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை வளர்ச்சி இரண்டாண்டுகளில் மிகவும் குறைந்த நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவருக்கு கடிதம்
22/03/2025 Duración: 02minஆஸ்திரேலிய பெடரல் தேர்தல் பிரச்சாரங்களில் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் விடயமும் பேசுபொருளாகியுள்ள பின்னணியில், இதுதொடர்பில் அகதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கூட்டணி அரசியல் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
How to choose the right tutor for your child - உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான தனியார் பயிற்சியாளரைத் தேர்வு செய்வது எப்படி?
22/03/2025 Duración: 11minTutoring is a booming industry in Australia, with over 80,000 tutors nationwide. Migrant families often spend big on tutoring, seeing education as the key to success. However, choosing the right tutor is essential to ensure a positive experience and real benefits for your child. - தனியார் பயிற்சி என்பது இந் நாட்டில் ஒரு பெரிய, மற்றும் வளர்ந்து வரும் துறையாகும், நாடு முழுவதும் 80,000ற்கும் மேற்பட்ட தனியார் பயிற்சியாளர்கள் உள்ளனர். புலம்பெயர்ந்த குடும்பங்கள் பெரும்பாலும் தனியார் பயிற்சி வகுப்புகளுக்காக அதிக பணம் செலவு செய்கின்றன. வெற்றிக்கான திறவுகோலாகக் கல்வியை அவர்கள் கருதுகின்றனர். ஆனால், உண்மையிலேயே பயனடையவும் நேர்மறையான அனுபவத்தை உருவாக்கவும், உங்கள் குழந்தைக்குப் பொருத்தமான ஒரு தனியார் பயிற்சியாளரைக் கண்டுபிடிப்பது மிக அவசியம்.
-
ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு
21/03/2025 Duración: 05minஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (16 – 22 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 22 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.
-
தமிழை காட்டுமிராண்டிகளின் மொழி என்று ஏன் பெரியார் கூறினார்? – கி. வீரமணி பதில்
21/03/2025 Duración: 16minதிராவிடர் கழகத் தலைவர் திரு. கி. வீரமணி அவர்கள் தற்போது ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவர் சிட்னியில் இருந்த போது, அவரை SBS ஒலிபரப்புக் கூடத்தில் சந்தித்து றைசலும் குலசேகரம் சஞ்சயனும் உரையாடியிருந்தார்கள். மூன்று பாகங்களாகப் பதிவேறும் அந்த உரையாடலின் நிறைவுப்பாகம் இது.
-
ஆஸ்திரேலியாவில் வாடகை வீட்டைப் பெறுவதற்கு $130,000 வருமானம் தேவை - ஆய்வு
21/03/2025 Duración: 02minஆஸ்திரேலியாவில் ஒருவர் நிதி அழுத்தத்திற்கு ஆளாகாமல் தனக்கான வாடகை வீட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில், அவர் ஆண்டுக்கு 130,000 டொலர்கள் வருமானம் ஈட்டுபவராக இருக்க வேண்டும் என்று புதிய அறிக்கை தெரிவிக்கிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ஆஸ்திரேலியாவிலிருந்து பல்லிகளை கடத்த முயன்ற வெளிநாட்டு மாணவருக்கு சிறை!
21/03/2025 Duración: 02minஆஸ்திரேலியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர் ஒருவருக்கு பல்லிகளைக் கடத்திய குற்றச்சாட்டில் 18 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மெல்பனில் இறந்தவரின் விரல்களை விற்க முயன்ற பெண் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது!
21/03/2025 Duración: 06minவிக்டோரியா மாநிலத்தில் விலங்குகள் காப்பகம் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் இறந்த ஆண் ஒருவரின் கால் விரல்களை இணையத்தில் விற்க முயற்சி செய்ததை அடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் மயிரிழையில் சிறை தண்டனையிலிருந்து தப்பித்துள்ளார். இது குறித்த செய்தியின் பின்னணியை வழங்குகிறார் செல்வி.
-
இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்
21/03/2025 Duración: 08minகொழும்பு பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் ரணில் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு; உள்ளூராட்சி அமைப்புக்களுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவு. மலையக மக்களின் அடிப்படை நலன்களுக்கு எதிராக செயற்படும் தோட்ட கம்பனிகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.
-
இஸ்ரேலிய தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியதில் 90ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
21/03/2025 Duración: 04minஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 21 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை வாசித்தவர் குலசேகரம் சஞ்சயன்.
-
விமானம் ரத்து/தாமதமானால் பயணிகளுக்கு நட்ட ஈடு வழங்க சட்டம் வந்தால் கட்டணம் உயரும் - விமான நிறுவனங்கள்
20/03/2025 Duración: 06minவிமானம் ரத்து செய்யப்படும் போது அல்லது தாமதமானால் பயணிகளுக்கு நட்ட ஈடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவு மீதான நாடாளுமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. நட்ட ஈடு வழங்குவதற்கான சட்டம் வந்தால் விமானக் கட்டணம் உயரும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து SBS News-இற்காக ஆங்கிலத்தில் Tanya Dendrinos எழுதிய விவரணத்தை தமிழில் தருகிறார் செல்வி.
-
Incoming Passenger அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை விரிவுபடுத்தியுள்ள Qantas!
20/03/2025 Duración: 02minஆஸ்திரேலியாவிற்கு விமானம் அல்லது கப்பலில் வருபவர்கள், தமது தங்குமிடம் மற்றும் நாட்டிற்கு என்ன பொருட்களை கொண்டு வந்துள்ளனர் என்பதை தெரிவிக்கும், Incoming Passenger அட்டையை டிஜிட்டல் முறையில் நிரப்பும் வசதியை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கையை Qantas நிறுவனம் மேலும் விரிவுபடுத்தியுள்ளது.இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.