Sbs Tamil - Sbs

  • Autor: Vários
  • Narrador: Vários
  • Editor: Podcast
  • Duración: 33:13:34
  • Mas informaciones

Informações:

Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • NSW-இல் விபத்துகளை குறைக்க சராசரி வேக கமராக்கள் விரைவில் அறிமுகம்!

    03/03/2025 Duración: 02min

    NSW-இல், கனரக வாகனங்களின் வேகத்தை கண்காணிக்க சராசரி வேக கேமராக்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் அனைத்து வாகனங்களையும் உள்ளடக்கும் வகையில் சோதனை விரிவாக்கப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • The AI Election: How artificial intelligence impacted the world's biggest ballots - SBS Examines: செயற்கை நுண்ணறிவு AI உலகின் மிகப்பெரிய வாக்குப் பதிவுகளை எவ்வாறு பாதித்தன?

    03/03/2025 Duración: 07min

    From "Communist Kamala" to Bollywood endorsements, artificial intelligence and disinformation played a big role in some of the biggest democratic elections last year. - "கம்யூனிஸ்ட் கமலா" முதல் பாலிவுட் வரை, செயற்கை நுண்ணறிவு மற்றும் தவறான தகவல் ஆகியவை கடந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல்களில் பெரும் பங்கு வகித்தன.

  • மகாஜன மாலை 2025 – நாடக விழா !

    03/03/2025 Duración: 09min

    மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் ஆஸ்திரேலியா ஒரு நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளது. இது குறித்து, அந்த சங்கத்தின் தலைவர் திருமதி லீலா தில்லைநாதன், மற்றும் ஒழுங்கமைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் முனைவர் பிரவீணன் மகேந்திரன் ஆகியோரோடு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • வண்ணக்கோலம் கொண்ட சிட்னி நகர்; காவல்துறை கலந்து கொண்டதா?

    03/03/2025 Duración: 10min

    வருடாந்திர Gay and Lesbian Mardi Gras அணிவகுப்பைக் கொண்டாட இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிட்னியில் கடந்த வார இறுதியில் கூடினார்கள்.

  • இந்தியா & தமிழ்நாடு: கடந்தவார நிகழ்வுகளின் தொகுப்பு

    03/03/2025 Duración: 11min

    உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எட்டு பேர் உயிரிழப்பு - 46 பேர் மீட்பு, தமிழகத்தில் தொடரும் இருமொழி கொள்கை சர்ச்சை மற்றும் பாலியல் புகார் வழக்கில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜர் போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • 50 Bulk Billing அவசர சேவை கிளினிக்குகளை கூடுதலாக திறப்போம் - லேபர்!

    02/03/2025 Duración: 05min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 03/03/2025) செய்திகள். வாசித்தவர் : செல்வி.

  • அமெரிக்க அதிபர் Vs உக்ரைன் அதிபர்: மோதல் பின்னணியும், அதிர்வுகளும்!

    02/03/2025 Duración: 12min

    அமெரிக்க அதிபர் Donald Trumpக்கும் உக்ரைன் அதிபர் Volodymyr Zelenskyyக்குமிடையே கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சந்திப்பு சண்டையாக முடிந்தது. உலக ஊடகங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் இந்த சர்வதேச நிகழ்வை அலசுகிறார் கார்த்திக் வேலு அவர்கள். ஆஸ்திரேலிய அரசியல் நோக்கர் மற்றும் எழுத்தாளரான கார்த்திக் அவர்கள் சமூக ஊடகங்களில் சர்வதேச அரசியல் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து தொடர்ந்து எழுதுகின்றவர். அவரோடு உரையாடியவர்: றைசெல்.

  • How can government payments support you? - அரச கொடுப்பனவுகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா?

    02/03/2025 Duración: 10min

    The Australian government has a social security system that provides a range of income support to those who are eligible . In fact, most people will receive a government payment at some stage in their lives. Strict rules determine who can receive these payments and how much they are paid. In this episode of Australia Explained we break down some of the most common government payments you may be entitled to. - தகுதியுள்ளவர்களுக்கு, ஆஸ்திரேலிய அரசு பல்வேறு வருமான ஆதரவை வழங்குகிறது. இதன் மூலம் ஒரு சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையில், பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் அரச கொடுப்பனவைப் பெறுவார்கள். இந்தக் கொடுப்பனவுகளை யார் பெறலாம், அவர்களுக்கு எவ்வளவு செலுத்தப்படுகிறது என்பதை கடுமையான விதிகள் தீர்மானிக்கின்றன. ஆஸ்திரேலியாவை அறிவோம் நிகழ்ச்சித் தொடரின் இந்த நிகழ்ச்சியில், நீங்கள் பெறக்கூடிய மிகவும் பொதுவான அரச கொடுப்பனவுகளில் சிலவற்றை நாங்கள் விளக்குகிறோம்.

  • ஆஸ்திரேலிய, உலக செய்திகளின் இந்த வார தொகுப்பு

    01/03/2025 Duración: 05min

    ஆஸ்திரேலியாவிலும், உலகிலும் இந்த வாரம் (23 பெப்ரவரி – 1 மார்ச் 2025) நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு. பதிவு செய்யப்படும் நாள்: 1 மார்ச் 2025 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

  • Medibank தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் $160 மில்லியனை திருப்பித் தருகிறது!

    28/02/2025 Duración: 02min

    Medibank தனது Give-back திட்டத்தின் ஒரு பகுதியாக தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் $160 மில்லியனை திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • Gig தொழிலாளர்களை பாதுக்காக்க அரசின் புதிய சட்டம்!

    28/02/2025 Duración: 03min

    பயண மதிப்பீடுகள் மற்றும் மதிப்புரைகளால் பணி நிர்ணயிக்கப்படும் Gig தொழில் உலகில், Gig பொருளாதாரத்தில் பணிபுரியும் ஆஸ்திரேலியர்கள் இப்போது அதிக பாதுகாப்புகளைப் பெறுவார்கள். இதற்கான புதிய பெடரல் சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இது குறித்த செய்தியை தருகிறார் செல்வி.

  • Understanding sex - செக்ஸ்: கொஞ்சம் அறிதல், நிறைய புரிதல் – பாகம் 2

    28/02/2025 Duración: 11min

    Dr. Niveditha Manokaran is a medical practitioner with over 15 years of experience in Sexual Health and HIV care. A TEDx speaker, sex educator, and domestic violence advocate, she is passionate about empowering women and youth. As the founder of Untaboos, she challenges societal taboos by providing education, counseling, and raising awareness within communities. Dr. Niveditha’s journey and expertise embody her mantra, "Educate Yourself, Protect Yourself," establishing her as a powerful voice for empowerment and personal growth. In this first part of her series on sexual health, Dr. Niveditha explores the topic of sexual pleasure. Produced by RaySel, Part 2. - டாக்டர். நிவேதிதா மனோகரன் அவர்கள் பாலியல் நலம் மற்றும் எச்.ஐ.வி பராமரிப்பில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள மருத்துவர். அவர் ஒரு TEDx பேச்சாளர், பாலியல் கல்வியாளர் மற்றும் குடும்ப வன்முறைக்கு எதிராக இயங்கும் சமூக ஆர்வலர். Untaboos எனும் அமைப்பின் நிறுவனராக இயங்கி, சமூகத்திற்கான கல்வி, ஆலோசனை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பவர்

  • இலங்கையின் இந்த வார முக்கிய நிகழ்வுகள்

    28/02/2025 Duración: 08min

    இலங்கை நாடாளுமன்றத்தில் வடபகுதி மீனவர்களுக்காக ஒருமித்து குரல் கொடுத்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்; இலங்கை பிரஜைகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசு அறிவிப்பு உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • நான்கு பணயக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் கையளித்ததையடுத்து, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுவித்தது.

    27/02/2025 Duración: 04min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 28 பிப்ரவரி 2025 வெள்ளிக்கிழமை.

  • விசா கிடைக்கும் முன்பே மரணிக்கும் பெற்றோர் : காலத் தாமதம் ஏன்? அமைச்சர் விளக்கம்

    27/02/2025 Duración: 05min

    உள்துறை அமைச்சகத்தில் பரிசீலனைக்கும் காத்திருக்கும் பெற்றோர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளன என்றும் சில விசா விண்ணப்பதாரர்கள் 30 முதல் 50 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என பெடரல் அரசின் மதிப்பாய்வில் முன்னர் கண்டறியப்பட்டிருந்தது. பல தசாப்தங்களாக நிலுவையில் உள்ள பெற்றோர் விசாக்களுக்கு தீர்வு காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பெடரல் அரசு கூறியுள்ளது. இது குறித்த செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • பிராந்திய பகுதிகளில் பணிபுரிபவர்களுக்கு நிரந்திர விசா ஏன் தாமதமாகிறது?

    27/02/2025 Duración: 06min

    494 அல்லது 491 துணைப்பிரிவு விசாவில் ஆஸ்திரேலியாவிற்கு பணிபுரிய வந்த பலர் நிரந்தரக் குடியுரிமைக்காக விண்ணப்பித்து காத்திருப்பதாக கூறப்படுகிறது. என்ன காரணம்? விளக்குகிறது இந்த விவரணம். SBS News -இற்காக Sunil Awasthi ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தயாரித்து வழங்குகிறார் செல்வி.

  • Is Tamil Essential for worship? – Vaishnavite scholar Swami Venkatesh explains - கருவறைக்குள் தமிழ் செல்லலாமா? வழிபாட்டுக்கு தமிழ் அவசியமா? –வெங்கடேஷ் சுவாமி பதில்

    27/02/2025 Duración: 21min

    Sri U Ve Thirukudanthai Dr. Venkatesh Swami is a renowned scholar and Upanyasam exponent in Sri Vaishnavism. Alongside his profound knowledge of Vedic scriptures and Divya Prabandham, he is also a medical practitioner by profession. His discourses, known for their clarity and depth, have inspired countless devotees across the world, making complex philosophical concepts accessible to all. In this conversation, he shares his journey from medicine to spiritual scholarship, the relevance of Vaishnavism in contemporary times, and the role of language — particularly Tamil — in preserving spiritual traditions. He also discusses the purpose of his visit to Australia and New Zealand. He spoke exclusively to RaySel in this interview. - ஆன்மீக அறிஞர் உ வே திருக்குடந்தை டாக்டர் வெங்கடேஷ் சுவாமி அவர்கள் புகழ்பெற்ற வைணவ சமயம் சார்ந்த ஆன்மீக பேச்சாளர். வேதங்கள், உபநிஷதங்கள், ஆழ்வார் பாசுரங்கள், குறிப்பாக நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவு கொண்டவர். மருத்துவராகவும் பணியாற்றும் அவர், சிக்கலான தத்துவங்களை எளிமைய

  • அசத்தல் பெண் முனைவர் சந்திரபுஷ்பம்

    27/02/2025 Duración: 17min

    'கிராமத்துக் குயில்' முனைவர் சந்திரபுஷ்பம் அவர்கள் நாட்டுப்புறப் பாடல்களை எழுதி பாடுவது மட்டுமன்றி, சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டுமென்ற குரல் கொடுத்து வருபவர், எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர்.

  • Superannuation வைத்திருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாக மாறுவர் – ஆய்வு முடிவு

    27/02/2025 Duración: 05min

    இந்நாட்டில் ஓய்வு பெறப் போகின்றவர்கள் , உலகின் மிகப் பெரிய பணக்காரர்களாக மாறும் வாய்ப்புள்ளது என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது. Superannuation என்ற ஓய்வூதிய நிதி பெறுபவர்கள், 2031ஆம் ஆண்டுக்குள் உலகின் பணக்கார மூத்த குடிமக்கள் குழுக்களில் ஒன்றாக மாறக்கூடும் என்று Super Members Council of Australia என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அண்மைய அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

  • ஏப்ரல் முதல் Health Insurance – நலக் காப்பீடு கட்டணம் உயர்கிறது!

    27/02/2025 Duración: 03min

    ஆஸ்திரேலியா மற்றும் உலகின் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 27 பெப்ரவரி 2025 வியாழக்கிழமை. வாசித்தவர்: றைசெல்.

página 7 de 14